தோனியின் நம்பிக்கைக்குரிய தளபதி: விராட் கோலி நெகிழ்ச்சி
By DIN | Published On : 26th August 2022 11:35 AM | Last Updated : 26th August 2022 11:35 AM | அ+அ அ- |

தோனியுடனான கூட்டணி, நட்பு பற்றி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார் விராட் கோலி.
இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டபோது துணை கேப்டனாக இருந்தவர் கோலி. இருவருடனான நட்பு ஆடுகளத்திலும் வெளிப்படும். தோனி தனக்குப் பெரிய ஊக்கமாகவும் ஆதரவாகவும் இருந்ததாகப் பல பேட்டிகளில் கூறியுள்ளார் கோலி.
ஆசியக் கோப்பை டி20 போட்டிக்காக துபை சென்றுள்ள கோலி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வரும் ஞாயிறன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இந்நிலையில் தோனி பற்றி ட்விட்டரில் கோலி கூறியதாவது:
இந்த மனிதனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த காலக்கட்டம் தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் மிக சந்தோஷமான, முக்கியமான தருணமாக இருந்தது. எங்களுடைய கூட்டணி எப்போதும் எனக்குச் சிறப்பானதாகும்.7+18 என்று நெகிழ்ச்சியுடன் பதிவு எழுதியுள்ளார்.