உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற இந்திய ஜோடி

அரையிறுதியில் இந்திய ஜோடி சிராக் - சாத்விக் சைராஜ் தோல்வியடைந்து...
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற இந்திய ஜோடி

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்திய ஜோடி சிராக் - சாத்விக் சைராஜ் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 

டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்தார்கள் இந்திய வீரர்களான சிராக் - சாத்விக் சைராஜ்.

இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் - சாத்விக் சைராஜ் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா - வூய் சோஹ் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 20-22, 21-18, 21-16 என இந்திய ஜோடி தோற்றது. இதையடுத்து அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் பெற்ற முதல் இந்திய ஜோடி என்கிற சாதனையை சிராக் - சாத்விக் சைராஜ் ஆகியோர் படைத்துள்ளார்கள். இதற்கு முன்பு 2011-ல் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில்  மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஆகிய இருவரும் பதக்கம் வென்றார்கள்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் வரலாற்றில் இந்தியாவின் 13-வது பதக்கத்தை சிராக் - சாத்விக் சைராஜ் ஜோடி பெற்றுள்ளது. 2011 முதல் இப்போட்டியில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு பதக்கமாவது பெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com