வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சச்சின் கூறிய அறிவுரை என்ன தெரியுமா?
By DIN | Published On : 29th August 2022 03:42 PM | Last Updated : 29th August 2022 03:45 PM | அ+அ அ- |

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி குறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.
துபையில் நடைபெற்ற ஆசியக் கோப்பையின் பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசினர். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டத்தின் போது பிட்னஸ் பிரச்சினைகளால் அவதியுற்றதை பார்த்தோம். அதனால் போட்டியே மாற்றம் கண்டது. இந்த போட்டி குறித்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
அழுந்தம் மிகுந்த சூழ்நிலைகளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்னஸ் முக்கியம். இருந்தும் இருநாட்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் அருமையாக பந்து வீசினர். ஜடேஜா , கோலியின் உதவியிடனும் முக்கியமாக இறுதியில் ஹார்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டமும் இந்தியாவை வெற்றி பெற செய்தது. திரில் வெற்றியடைந்த இந்தியாவிற்கு வாழ்த்துகள்.
It came down to fitness of the fast bowlers while put under pressure, though both teams’ pacers bowled well upfront.
— Sachin Tendulkar (@sachin_rt) August 28, 2022
Crucial knock by Hardik to stay till the end & get us over the line & ably supported by @imjadeja & Virat.
Congrats on a nail-biting win.#INDvsPAK pic.twitter.com/dYhiaa3Omh