கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான பெல்ஜியமும் ஜெர்மனியும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளன.
நேற்றைய ஆட்டங்களில் கனடாவை மொராக்கோ 2-1 எனவும் ஸ்பெயினை ஜப்பான் 2-1 எனவும் கோஸ்டா ரிக்காவை ஜெர்மனி 4-2 எனவும் வீழ்த்தின. குரோஷியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
குரூப் ஈ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த ஜப்பானும் ஸ்பெயினும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன. 2014-ல் உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனியும் கோஸ்டா ரிக்காவும் வெளியேறின. நேற்றைய ஆட்டத்தில் வெற்றி கிடைத்தாலும் ஜெர்மனியால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. தோற்றாலும் 2-ம் இடம் பிடித்ததால் ஸ்பெயின் தகுதி பெற்றது. ஜெர்மனி அணியும் ஸ்பெயின் போல 4 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ஸ்பெயின் தகுதியடைந்தது.
குரூப் எஃப் பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த மொராக்கோவும் குரோஷியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. பெல்ஜியம், கனடா அணிகள் தகுதி பெறவில்லை. தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி நேற்று குரோஷியாவை வீழ்த்த முடியாத காரணத்தால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
4 முறை உலகக் கோப்பைகளை வென்ற ஜெர்மனி அணியும் நெ.2 அணியான பெல்ஜியமும் ஒரே நாளில் போட்டியை விட்டு வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


