
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.
3வது போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி கலமிறங்கியது. இஷான் கிஷன், குல்தீப் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஏற்கனவே வங்கதேசம் இந்த தொடரில் 2-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 150 ரன்களை கடந்துள்ளார்.
30 ஓவர் முடிவில் இந்திய அணி 246 ரன்களுக்கு 1 விக்கெட். இஷான் கிஷன் 179 ரன்கள் (இதில் 9 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகள் அடங்கும்), விராட் கோலி 58 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.