2022-23 ரஞ்சி கோப்பையை வெல்லப்போகும் இரு அணிகள்: ஏன், எதற்கு, எப்படி?

2022-23 ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான ஆட்டங்கள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.
2021-22 ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணி
2021-22 ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணி

2022-23 ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான ஆட்டங்கள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. 2023 பிப்ரவரி 20 அன்று நிறைவுபெறுகிறது. 

இந்த வருடப் போட்டியில் எலைட் பிரிவில் 32 அணிகள் பங்கேற்கின்றன. முதல்முறையாக இம்முறை இரு அணிகளுக்கு ரஞ்சி கோப்பையை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எலைட், பிளேட் என ரஞ்சி அணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிளேட் பிரிவு அணிகளால் எலைட் அணிகளுடன் சரிசமமாகப் போட்டியிட முடியாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் நாக் அவுட் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி, நாகலாந்து அணிக்கு எதிராக 1008 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தடுக்கும் பொருட்டு இரு பிரிவுகளாகப் போட்டி பிரிக்கப்பட்டுள்ளது. 

* இந்த வருடப் போட்டி 10 வாரங்கள் நடைபெறவுள்ளன. ரஞ்சி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இரு அணிகளுக்கு வழங்கப்படுகிறது. 

* 32 எலைட் அணிகள், 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 8 அணிகள். இதிலிருந்து இரு அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். இதனால் ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது 7 ஆட்டங்கள் கிடைக்கும். 

* பிளேட் பிரிவில் 6 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் ஒருமுறை மோதும். 6 அணிகளிலிருந்து 4 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும். கடைசி இரு அணிகள் 5-வது இடத்துக்குப் போட்டியிடும். அதேபோல 3-வது இடத்துக்கும் போட்டி இருக்கும். அதனால் பிளேட் பிரிவு அணிகளும் குறைந்தது 7 ஆட்டங்களில் விளையாடும். முன்பு இருந்தது போல பிளேட் அணியில் முதலிடம் பிடிக்கும் அணி, எலைட் பிரிவில் விளையாட வாய்ப்பில்லை. பிளேட் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இரு அணிகள், 2023-24 ரஞ்சி கோப்பைப் போட்டியில் எலைட் பிரிவில் பங்கேற்கும். 

* ரஹானே, இஷாந்த் சர்மா, மயங்க் அகர்வால், விஹாரி, அஸ்வின், யாஷ் துல், ஜெயிஸ்வால் போன்ற பல பிரபலங்கள் இந்த வருடப் போட்டியில் இடம்பெறவுள்ளார்கள்.

* குரூப் பி பிரிவில் தமிழக அணி இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரிவில் செளராஷ்டிரம், மும்பை, ஆந்திரம், ஹைதராபாத், மஹாராஷ்டிரம், தில்லி, அஸ்ஸாம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

* கடந்த வருடம் 982 ரன்கள் எடுத்த மும்பையின் சர்ஃபராஸ் கான், இந்த வருடம் இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். ரஞ்சியில் சிறப்பாக விளையாடி வரும் ஜெயதேவ் உனாட்கட், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com