
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் தோற்றது குறித்து இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. எல்லீஸ் பெரி 75 ரன்கள் எடுத்தார். இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஷஃபாலி வர்மா 52 ரன்கள் எடுத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
3-வது டி20 ஆட்டத்தில் தோற்றது குறித்து இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூறியதாவது:
எப்போதும் அதிரடியாக விளையாட வேண்டியதில்லை. இந்த ஆட்டத்தில் எங்களுக்கு நிறைய பவுண்டரிகள் கிடைத்தாலும் நிறைய பந்துகளை வீணடித்து விட்டோம். அதனால் தான் இந்த ஆட்டத்தில் எங்களால் வெல்ல முடியவில்லை. உங்களுடைய பலம் என்ன என்னவென்று அறிந்து, அதற்கேற்றபடி விளையாடினால் வெற்றி கிடைக்கும். எங்களுக்கு பவுண்டரிகள் கிடைத்தாலும் எந்த ஓவரிலும் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. சில ஓவர்களில் 7 ரன்களுக்குக் குறைவாக எடுத்தோம். அதனால் தான் இலக்கை வெற்றிகரமாக எங்களால் விரட்ட முடியவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.