டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை!

இந்திய அணியின் ரவிச்சந்தின் அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை!

இந்திய அணியின் ரவிச்சந்தின் அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. 

இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் எடுத்த 6-வது வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக கபில் தேவ், ஷான் பொல்லாக், ஸ்டூவர்ட் பிராட், ஷேன் வார்னே மற்றும் சர் ரிச்சர்ட் ஹாட்லி ஆகிய 5 கிரிக்கெட் வீரர்களும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். அந்த வரிசையில் 6-வது வீரராக தமிழக வீரர் அஸ்வின் இணைந்துள்ளார். 

இந்த சாதனையை அவர் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின்போது படைத்தார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் குறுகிய காலத்தில் 450 விக்கெட்டுகளைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைக்க உள்ளார். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் 447 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 450 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அவர் இந்த சாதனையை தான் விளையாடிய 93-வது டெஸ்ட் போட்டியில் படைத்திருந்தார். 

அனில் கும்ப்ளேவின் இந்த சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க அஸ்வினுக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன.

வங்கதேசத்துக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி அவரது 88-வது சர்வதேச  டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com