இரும்புப் பெண் சமந்தா: நடிகரின் அன்புப் பரிசு! 

‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் நடிகர் சமந்தாவுக்கு அன்புப் பரிசளித்துள்ளார். 
இரும்புப் பெண் சமந்தா: நடிகரின் அன்புப் பரிசு! 
Published on
Updated on
1 min read

சமீபத்தில் பான் இந்திய படமாக ரிலீஸான சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் ரூ. 50-60 கோடி வசூலானதாக தகவல் வெளியானது. மேலும் 2023இல் இவரது சாகுந்தலம், குஷி படங்கள் வெளிவர உள்ளது. 

சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமந்தா தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். சமந்தாவுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததன்பேரில், சமந்தா தென்கொரியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்திலிருந்து தற்காலிக ஓய்வு பெறுவதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், “ நன்றி ராகுல். யாரெல்லாம் போராடுகிறார்களோ அவர்களுக்கு இது பொருந்தும். உனக்கும் இது பொருந்தும். தொடர்ந்து போராடு. நாம் முன்னெப்போதை விடவும் வலிமையானவர்கள் ஆகுவோம்” என பதிவிட்டு இருந்தார். மாஸ்கோவின் காவிரி படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். 

இதனுடன் நடிகர் ராகுல் ரவீந்திரன் சூப்பர்மேன் வடிவத்தில் சமந்தாவின் முதலெழுத்தை வடிவமைத்து இரும்புப் பெண் சமந்தா என கவிதையாக பரிசளித்திருந்தார். அதில் எழுதி இருந்ததாவது: 

சுரங்கப் பாதை முழுவதும் இருட்டு. ஒளியே இல்லை. கால்கள் பாரமாக இருந்தாலும் இழுத்துக் கொண்டு செல்கிறாய். பயத்தையும் சந்தேகத்தையும் மூழ்கடிக்கும்போது நீ ஒரு போர்வீரன். நீ இரும்பினால் உருவானவள். வெற்றி பெறுவது உனது பிறப்புரிமை. நீ தொடர்ந்து நடந்து கொண்டே இரு. விரைவில் சூரிய ஒளி உன் மீது விழும். போராடுவர்கள் மட்டுமே இவ்வளவுநாள் தாக்குபிடிப்பார்கள். உன்னை மாதிரியான போராளிகள்தான் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என்பதை நீ மறுக்கமாட்டாய். ஏனெனில் எது உன்னை தோற்கடிக்க முடியவில்லையோ அப்போதே நீ முன்பை விடவும் பலசாலி ஆகிவிட்டாய். நிரந்தரமாக வலிமையானவளாகவும் மாற்றிவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com