வீரர்களுக்கான ஏலம், டிஆர்எஸ்: டிஎன்பிஎல் போட்டியில் புதிய மாற்றங்கள்!

வீரர்களுக்கான ஏலம், டிஆர்எஸ்: டிஎன்பிஎல் போட்டியில் புதிய மாற்றங்கள்!

டிஎன்பிஎல் போட்டியில் அடுத்த வருடம் முதல் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. 

டிஎன்பிஎல் போட்டியில் அடுத்த வருடம் முதல் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. 

இந்த வருடம் கோயம்புத்தூரில் நடைபெற்ற டிஎன்பில் டி20 போட்டியின் இறுதிச் சுற்றில் ஷாருக் கான் தலைமையிலான கோவை அணி, 17 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 65 ரன்கள் எடுத்தார். சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேப்பாக் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தபோது மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆட்டத்தைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதால் டிஎன்பிஎல் கோப்பையை கோவை, சேப்பாக் ஆகிய இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன. 5-வது ஓவர் மட்டும் வீசி முடிக்கப்பட்டிருந்தால் சேப்பாக் அணி தோல்வியடைந்திருக்கும். ஏனெனில் அந்த அணி 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 24 ரன்கள் பின்தங்கியிருந்தது. இறுதிச்சுற்றுக்கான ஆட்ட நாயகன் விருதை சந்தீப் வாரியரும் தொடர் நாயகன் விருதை சஞ்சய் யாதவும் வென்றார்கள். டிஎன்பிஎல் கோப்பையை சேப்பாக் அணி 4-வது முறையாக வென்றுள்ளது. கோவை அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை. 

இந்நிலையில் 2023 முதல் டிஎன்பிஎல் போட்டி புதிய மாற்றங்களுடன் நடைபெறப் போகிறது.

* அடுத்த ஆண்டு முதல் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ. 70 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி உண்டு.  

* 2023-ல் ஜூன், ஜூலை மாதங்களில் போட்டி நடைபெறவுள்ளது.

* டிஎன்பிஎல் 7-வது பருவத்தில் டிஆர்எஸ் வசதி வழங்கப்படவுள்ளது. 

* போட்டியில் பங்கேற்க விருப்பப்படும் வீரர்கள் டிசம்பர் 28 முதல் ஜனவரி 20-ம் தேதிக்குள் தங்களது பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.

வீரர்களின் ஏலம், டிஆர்எஸ் போன்ற மாற்றங்களால் டிஎன்பில் டி20 போட்டி மீது ரசிகர்களுக்குக் கூடுதல் ஆர்வம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com