எபடாட்
எபடாட்

முதல் டெஸ்ட்: நியூசிலாந்தில் வரலாற்று வெற்றியை அடைந்த வங்கதேச அணி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்று வெற்றியை அடைந்துள்ளது வங்கதேச அணி.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்று வெற்றியை அடைந்துள்ளது வங்கதேச அணி.

வங்கதேச அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 328 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 176.2 ஓவர்களில் 458 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேச அணியில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 78 ரன்கள், ஷாண்டோ 64 ரன்கள், கேப்டன் மோமினுல் ஹஹ் 88 ரன்கள், விக்கெட் கீப்பர் லிடன் தாஸ் 86 ரன்கள் எடுத்தார்கள். நியூசி. தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 63 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. டெய்லர் 37, ரச்சின் ரவீந்திரா 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் 5-ம் நாளான இன்று நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 73.4 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெய்லர் 40 ரன்களிலும் ரச்சின் ரவிந்திரா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். எபடாட் 6 விக்கெட்டுகளும் டஸ்கின் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

முதல் டெஸ்டில் வங்கதேச அணி வெற்றி பெற 40 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டது. வங்கதேச அணி, 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது. 

இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிராக முதல்முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்கள் வங்கதேச வீரர்கள். மேலும் ஒருநாள், டி20, டெஸ்ட் என எந்தவகை கிரிக்கெட் போட்டிகளிலும் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வங்கதேசம் இதற்கு முன்பு ஜெயித்ததே இல்லை. சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 17 டெஸ்டுகளில் தோற்காத நியூசிலாந்து, தற்போது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com