புதிய விதிமுறையை உருவாக்க வேண்டுமா?: பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக சச்சின் கருத்து

பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகப் புதிய விதிமுறையை உருவாக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறையை உருவாக்க வேண்டுமா?: பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக சச்சின் கருத்து
Published on
Updated on
1 min read

பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகப் புதிய விதிமுறையை உருவாக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட், சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 31-வது ஓவரை கிரீன் வீசினார். அவருடைய முதல் பந்து ஸ்டோக்ஸை போல்ட் செய்தது. ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டதே தவிர பைல்ஸ் கீழே விழவில்லை. நடுவர் பால் ரீஃபில், பந்து ஸ்டோக்ஸின்  காலில் பட்டது என்று நினைத்து எல்பிடபிள்யூவுக்கு அவுட் கொடுத்தார். இதை 3-வது நடுவரிடம் முறையீடு செய்தார் ஸ்டோக்ஸ். ரீபிளேவில் தான் பந்து ஸ்டம்பில் பட்டு பைல்ஸ் கீழே விழாமல் இருந்தது தெரிய வந்தது. இதனால் தப்பித்த ஸ்டோக்ஸ் தொடர்ந்து விளையாடி 66 ரன்கள் எடுத்துக் கடைசியில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பந்து ஸ்டம்பில் பட்டும் பைல்ஸ் கீழே விழாத சம்பவம் கிரிக்கெட் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தருணங்களில் பேட்டரை அவுட்டாக்கி வெளியேற்ற வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர், ட்விட்டரில் கூறியதாவது:

பந்து ஸ்டம்புகளில் மோதி பைல்ஸ் கீழே விழவில்லையென்றால் ஸ்டம்புகளில் மோதிய பந்து என (விக்கெட்டை அளிக்கும்) ஒரு விதிமுறையை அறிமுகப்படுத்த வேண்டுமா? எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? பந்துவீச்சாளர்களுக்கு நியாயமாக நடந்துகொள்வோம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com