கேப் டவுன் ஆடுகளம் எப்படியிருக்கிறது?: புஜாரா

கேப் டவுன் டெஸ்டில் நான் செய்யாததை விராட் கோலி செய்துள்ளார் என இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். 
கேப் டவுன் ஆடுகளம் எப்படியிருக்கிறது?: புஜாரா

கேப் டவுன் டெஸ்டில் நான் செய்யாததை விராட் கோலி செய்துள்ளார் என இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் செவ்வாய் அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹனுமா விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ. அணியில் மாற்றம் எதுவுமில்லை.  

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஆன்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

முதல் நாள் முடிவில் தெ.ஆ. அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 8 ரன்களும் நைட் வாட்ச்மேன் மஹாராஜ் 6 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். எல்கரை 3 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கும் முன்பு இந்திய வீரர் புஜாரா பேட்டியளித்ததாவது:

இது நல்ல ஆடுகளம். பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான அம்சங்கள் உள்ளன. நீங்கள் நன்கு விளையாடினால் உங்களுடைய ஷாட்களுக்கு மதிப்பு இருக்கும். நல்ல கிரிக்கெட் ஆடுகளம். இதில் நீங்கள் எப்போதும் செளகரியமாக உணர முடியாது. எந்த ஷாட்டை விளையாட வேண்டும், விளையாடக் கூடாது என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆடுகளத்தில் நீடித்து விளையாடும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் விராட் கோலியால் செய்ய முடிந்தது. 30-40 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் எங்களுடைய பந்துவீச்சுக் குழுவினர் மீது நம்பிக்கை உள்ளது. சரியாகப் பந்துவீசினால் அவர்களை எங்களாக் கட்டுப்படுத்த முடியும். இந்த ஆடுகளத்தில் 275 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com