தெ.ஆ. ஒருநாள் தொடர்: இந்திய அணிக்கு ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி தேர்வானது ஏன்?

வாஷிங்டன் சுந்தர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தெ.ஆ. ஒருநாள் தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ஜெயந்த் யாதவ்
ஜெயந்த் யாதவ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள்.

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தெ.ஆ. ஒருநாள் தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவும் 2-வது டெஸ்டில் சிராஜுக்குக் காயம் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக நவ்தீப் சைனியும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள்.

ஜெயந்த் யாதவ், சைனி ஆகிய இருவரையும் பிசிசிஐ தேர்வுக்குழு தேர்வு செய்தது ஏன்?

இருவருமே தற்போது இந்திய அணியினருடன் தென்னாப்பிரிக்காவில் உள்ளார்கள். ஜெயந்த் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். எனினும் டெஸ்ட் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சைனி, நவம்பர் முதல் தென்னாப்பிரிக்காவில் உள்ளார். இந்திய ஏ அணியில் இடம்பெற்று விளையாடிய சைனி, இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ளார். கரோனா காலத்தில் இரு புதிய வீரர்களை உடனடியாகத் தேர்வு செய்து தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்புவது கடினம். இதன் காரணமாகவே இந்திய டெஸ்ட் அணியில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள ஜெயந்த் யாதவும் சைனியும் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

வாஷிங்டன் சுந்தர் போல ஹரியாணாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான 31 வயது ஜெயந்த் யாதவ் இந்திய அணிக்காக இதுவரை 5 டெஸ்ட், 1 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடியுள்ளார். தில்லியைச் சேர்ந்த 29 வயது சைனி, இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

டெஸ்ட் அணியில் இடம்பெறாமல் ஒருநாள் அணிக்குத் தேர்வான ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஹால், வெங்கடேஷ் ஐயர், புவனேஸ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் புதன் அன்று தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com