இந்தியா ஓபன் பாட்மிண்டன்: ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்களுக்கு கரோனா
By DIN | Published On : 13th January 2022 12:25 PM | Last Updated : 13th January 2022 12:25 PM | அ+அ அ- |

இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் விளையாடும் ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தில்லியில் இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கரோனாவாலிருந்து குணமான பிறகே ஏழு பேரும் தில்லியை விட்டு வெளியேற முடியும்.
ஏழு வீரர்களுக்கும் செவ்வாய் அன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலையில் வெளியானது. ஏழு பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் விளையாடும் ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்கள். இரட்டையர் போட்டியில் இவர்களுடன் விளையாடிய வீரர்களும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.