இந்திய அணியின் புதிய கேப்டன் யார்?: கவாஸ்கர் பதில்

விராட் கோலிக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பந்தைத் தேர்வு செய்யவேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் புதிய கேப்டன் யார்?: கவாஸ்கர் பதில்

விராட் கோலிக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பந்தைத் தேர்வு செய்யவேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார் விராட் கோலி. இதையடுத்து இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்போது துணை கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா, இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் முன்னாள் வீரர் சுநீல் கவாஸ்கர் கூறியதாவது:

இந்திய அணியை முன்னெடுத்துச் செல்லும் கேப்டன் யார் என்பதில் தேர்வுக்குழுவினரிடையே விவாதம் ஏற்படும். என்னைக் கேட்டால், ரிஷப் பந்தை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கலாம். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிக்கி பாண்டிங் விலகிய பிறகு கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா. அதன் பிறகு அவருடைய பேட்டிங் எப்படி மாறிவிட்டது! கேப்டனானதால் உண்டான பொறுப்பு, பெரிய ஸ்கோர்களை எடுக்க உதவியது. முன்பு 30, 40 ரன்கள் எடுத்தவர் அதன்பிறகு சதம், இரட்டைச் சதம் என எடுத்தார். அதேபோல ரிஷப் பந்துக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டால் அவரால் அதிகளவில் ரன்களைக் குவிக்க முடியும். 21 வயதில் கேப்டன் ஆன டைகர் பட்டோடி பல சாதனைகளைப் படைத்தார். ஐபிஎல் போட்டியில் தில்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பெற்ற வெற்றிகளைக் கொண்டு அவரால் இந்திய அணியின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவ முடியும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com