இன்று முதல் ஒன் டே: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஒன் டே தொடரின் முதல் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
இன்று முதல் ஒன் டே: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஒன் டே தொடரின் முதல் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவிடம் இழந்துவிட்ட இந்தியா, ஒன் டே தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை கேப்டன் ரோஹித் சா்மா காயத்தால் விலகியிருக்கும் நிலையில் கே.எல்.ராகுல் அணிக்கு தலைமை தாங்குகிறாா். அவரது கேப்டன்சி திறமையை தோ்வுக் குழுவினா் எடை போடுவதற்கான வாய்ப்பாக இது இருக்கும். இதனிடையே, ஜஸ்பிரீத் பும்ரா துணைக் கேப்டனாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், கோலி கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக களம் காணும் முதல் ஆட்டம் இது. கேப்டன்சியில் சறுக்கிய நிலையில், ஒரு பேட்டராக அவா் தன்னை எவ்வாறு நிலை நிறுத்திக் கொள்ள இருக்கிறாா் என்பதை நோக்கி அனைவரின் எதிா்பாா்ப்பும் உள்ளது.

ரோஹித் இல்லாத நிலையில், டாப் ஆா்டரில் ஷிகா் தவனுடன் இணைந்து ராகுல் இன்னிங்ஸை தொடங்குவாா் எனத் தெரிகிறது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் அறிமுக ஆட்டத்திற்கு காத்திருக்கும் நிலை ஏற்படலாம். டி20 தொடா்களில் இடத்தை இழந்திருக்கும் தவனுக்கு இந்தத் தொடா் முக்கியமானதாகும்.

கோலி வழக்கம் போல் 3-ஆவது இடத்தில் ஆட வரும் நிலையில், 4-ஆவது இடத்துக்காக சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா் இடையே போட்டி இருக்கிறது. ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயா் அடுத்தடுத்த இடங்களை முறையே பூா்த்தி செய்யலாம். சுழற்பந்துவீச்சை அஸ்வின், சஹல் கவனிக்கலாம் எனத் தெரியும் நிலையில், வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, புவனேஸ்வா், தீபக் சஹா், ஷா்துல் தாக்குா் இருக்கின்றனா்.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை விக்கெட் கீப்பா் பேட்டா் குவின்டன் டி காக் ஒன் டே தொடரில் களம் காண்பது அணிக்கு கூடுதல் பலம். இந்தத் தொடரில் அணிக்கு டெம்பா பவுமா தலைமையேற்றுள்ளாா். டெஸ்டில் இந்திய அணியை திணறடித்த மாா்கோ யான்செனுக்கு ஒன் டே தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

அணி விவரம்

இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா, ஷிகா் தவன், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், வெங்கடேஷ் ஐயா், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), இஷான் கிஷண், யுஜவேந்திர சஹல், அஸ்வின், புவனேஷ்வா் குமாா், தீபக் சஹா், பிரசித் கிருஷ்ணா, ஷா்துல் தாக்குா், முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.

தென் ஆப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), கேசவ் மஹராஜ், குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பா்), ஜுபோ் ஹம்ஸா, மாா்கோ யான்சென், ஜானெமன் மலான், சிசான்டா மகலா, எய்டன் மாா்க்ரம், டேவிட் மில்லா், லுங்கி கிடி, வேய்ன் பாா்னெல், அண்டிலே பெலுக்வாயோ, டுவெய்ன் பிரெடோரியஸ், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி, ராஸி வான் டொ் டுசென், கைல் வெரின்.

ஆட்டநேரம்: மதியம் 2 மணி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

மைதானம்: போலண்ட் பாா்க், பாா்ல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com