உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போது.... (விடியோக்கள்)

ஓர் ஆட்டம் தவிர எல்லாவற்றிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போது.... (விடியோக்கள்)

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

2022 டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி ஆகிய நகரங்களில் உலகக் கோப்பைப் போட்டியின் 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டிலும் நவம்பர் 13 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

சூப்பர் 12 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள 4 நாடுகள் தகுதிச்சுற்றின் வழியே போட்டியில் பங்கேற்கும். முதல் சுற்றில் தேர்வாகும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர அணிகளுடன் இணைந்துகொள்ளும்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 16 அன்று தொடங்குகின்றன. அக்டோபர் 22-ல் தொடங்கும் சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டமாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 23, ஞாயிறன்று இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. 

ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போது ஓர் ஆட்டம் தவிர எல்லாவற்றிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில்தான் இந்தியாவை முதல்முறையாகத் தோற்கடித்தது பாகிஸ்தான். 

ஒருநாள் உலகக் கோப்பை

1992 - 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 
1996 - 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி  
1999 - 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 
2003 - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 
2011 - 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 


2015 - 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
2019 - 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி  

டி20 உலகக் கோப்பை

2007 - பெளல் அவுட் முறையில் இந்தியா வெற்றி 


2007 - 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி  
2012 - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 
2014 - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 
2016 - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 


2021 - 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com