2022 டி உலகக் கோப்பை: இந்திய அணி ஆட்டங்களின் அட்டவணை

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.
2022 டி உலகக் கோப்பை: இந்திய அணி ஆட்டங்களின் அட்டவணை
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ.  2022 டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி ஆகிய நகரங்களில் உலகக் கோப்பைப் போட்டியின் 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டிலும் நவம்பர் 13 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

சூப்பர் 12 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள 4 நாடுகள் தகுதிச்சுற்றின் வழியே போட்டியில் பங்கேற்கும். முதல் சுற்றில் தேர்வாகும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர அணிகளுடன் இணைந்துகொள்ளும்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 16 அன்று தொடங்குகின்றன. அக்டோபர் 22-ல் தொடங்கும் சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டமாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 23, ஞாயிறன்று இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. 

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஆட்டங்கள்

அக்டோபர் 23: இந்தியா - பாகிஸ்தான், மெல்போர்ன்
அக்டோபர் 27: இந்தியா - முதல் சுற்றின் வழியே தேர்வான அணி, சிட்னி
அக்டோபர் 30: இந்தியா - தென்னாப்பிரிக்கா, பெர்த்
நவம்பர் 2: இந்தியா - வங்கதேசம், அடிலெய்ட்
நவம்பர் 6: இந்தியா - முதல் சுற்றின் வழியே தேர்வான அணி, மெல்போர்ன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com