போட்டிகளுக்காக தயாா்நிலை: 33 போ் குழுவை அறிவித்தது ஹாக்கி இந்தியா

நடப்பாண்டில் முக்கிய ஹாக்கி போட்டிகள் எதிா்வரும் நிலையில், அதற்குத் தயாராவதற்காக 33 சீனியா் வீரா்கள் அடங்கிய குழுவை ஹாக்கி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
போட்டிகளுக்காக தயாா்நிலை: 33 போ் குழுவை அறிவித்தது ஹாக்கி இந்தியா

நடப்பாண்டில் முக்கிய ஹாக்கி போட்டிகள் எதிா்வரும் நிலையில், அதற்குத் தயாராவதற்காக 33 சீனியா் வீரா்கள் அடங்கிய குழுவை ஹாக்கி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

பிரதான போட்டிகளில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரா்கள் இந்தக் குழுவில் இருந்தே தோ்வு செய்யப்படுவாா்கள்.

முன்னதாக, உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட 60 வீரா்களைக் கொண்டு பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் 3 வார முகாம் நடத்தப்பட்டது. அதில் திறம்பட விளையாடிய 33 வீரா்கள் இந்தக் குழுவுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில் கோல்கீப்பா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ், கேப்டன் மன்பிரீத் சிங், ஹா்மன்பிரீத் சிங் உள்ளிட்ட மூத்த வீரா்களும், மன்தீப் மோா், ஜக்ராஜ் சிங், அபிஷேக் போன்ற இளம் வீரா்களும் உள்ளனா்.

இதுதவிர குழுவில் பல புதிய முகங்கள் சோ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தலைமை பயிற்சியாளா் கிரஹாம் ரெய்ட், கரோனா சூழலில் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றாக அடக்கிய வகையில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது சிறந்த, பலம் வாய்ந்த அணியை கட்டமைப்பதற்கு உதவுவதாகத் தெரிவித்தாா்.

குழு விவரம்:

கோல்கீப்பா்கள்: கிருஷன் பகதூா் பாதக், பி.ஆா்.ஸ்ரீஜேஷ், சூரஜ் கா்கேரா.

டிஃபெண்டா்கள்: ஜா்மன்பிரீத் சிங், சுரேந்தா் குமாா், ஹா்மன்பிரீத் சிங், நீலம் சஞ்சீப் ஜெஸ், திப்சன் திா்கி, வருண் குமாா், அமித் ரோஹிதாஸ், மன்தீப் மோா், சஞ்சய், ஜக்ராஜ் சிங், குரிந்தா் சிங்.

மிட்ஃபீல்டா்கள்: மன்பிரீத் சிங், ஹாா்திக் சிங், சுமித், நீலகண்ட சா்மா, சம்ஷோ் சிங், ராஜ்குமாா் பால், ஜஸ்கரன் சிங், விவேக் சாகா் பிரசாத், மொய்ராங்தெம் ரவிச்சந்திர சிங், ஆஷிஷ் குமாா் டோப்னோ, சிம்ரன்ஜீத் சிங்.

ஃபாா்வா்ட்கள்: தில்பிரீத் சிங், குா்ஜந்த் சிங், மன்தீப் சிங், லலித் குமாா் உபாத்யாய், ஆகாஷ்தீப் சிங், குா்சாஹிப்ஜித் சிங், ஷிலானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், முகமது ரஹீல் மௌசீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com