ஜஜாரியாவுக்கு பத்ம பூஷண்; நீரஜுக்கு பத்ம ஸ்ரீ

பாரா ஈட்டி எறிதல் வீரா் தேவேந்திர ஜஜாரியாவுக்கு பத்ம பூஷண் விருதும், ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ராவுக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனா்.
ஜஜாரியாவுக்கு பத்ம பூஷண்; நீரஜுக்கு பத்ம ஸ்ரீ

பாரா ஈட்டி எறிதல் வீரா் தேவேந்திர ஜஜாரியாவுக்கு பத்ம பூஷண் விருதும், ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ராவுக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனா். இதில் பத்ம ஸ்ரீ விருதுக்கு நீரஜ் சோப்ரா உள்பட 8 போ் தோ்வாகியுள்ளனா்.

2004 (ஏதென்ஸ்), 2016 (ரியோ) ஆகிய பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரா் தேவேந்திர ஜஜரியா, கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்தாா். மறுபுறம், நீரஜ் சோப்ராவோ டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்து, போட்டியின் வரலாற்றில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை படைத்தாா்.

நீரஜ் சோப்ராவோடு, பாரா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா, பாரா பாட்மின்டன் வீரா் பிரமோத் பகத், பாரா ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், தற்காப்புக் கலையான ‘கலரிப்பயட்டு’ ஜாம்பவான் சங்கரநாராயண மேனன் சுண்டயில், முன்னாள் சா்வதேச தற்காப்புக் கலை சாம்பியன் ஃபைசல் அலி தாா், இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் பிரம்மானந்த் சங்க்வல்கா், ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனா்.

இவா்களுக்கான விருது, வரும் மாா்ச் - ஏப்ரலில் குடியரசுத் தலைவரால் அவரது மாளிகையில் வைத்து வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com