இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது. முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் மே.இ. தீவுகள் அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
மே.இ. அணி வீரர்கள் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அணி வீரர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 3-வது டி20 ஆட்டத்தில் ஓடியன் ஸ்மித் இடம்பெறாத காரணத்தால் இந்தச் சர்ச்சை உருவானதாகத் தெரிகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் ஓடியன் ஸ்மித் விளையாடினார். முதல் டி20யில் ஒரு ஓவர் வீசினார். 2-வது டி20யில் பேட்டிங்கில் 7 ரன்கள் எடுத்தார். 3-வது டி20 ஆட்டத்தில் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக ஸ்மித்தை நீக்கிவிட்டு ரோவ்மேன் பவலைச் சேர்த்தார்கள். அந்த ஆட்டத்தில் ரோவ்மேன் பவல், 53 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியதாவது:
யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவோ யாரையும் கீழே தள்ளவோ விரும்ப மாட்டோம். நான் இருக்கும்வரை அது நடக்காது. இந்த விவகாரம் தொடர்பாக நடக்கும் முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும். அணிக்கு யார் சிறந்த வீரர்களாக இருப்பார்களோ அவர்களைத் தேர்வு செய்வோம். அணியில் ஓடியன் இடம்பிடிக்கவில்லையென்றால் ரோவ்மேன் பவல் நன்றாக விளையாடுவார் என நாங்கள் எண்ணியதால் தான். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் யாரையும் பாதிப்புக்கு ஆளாக விடமாட்டோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


