பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

பேட்டிங் தரவரிசைப் பட்டியலில்: பெரிய சரிவைச் சந்தித்த விராட் கோலி

News image
Updated On :6 ஜூலை 2022, 11:02 am

DIN

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் கடந்த ஆறு வருடங்களில் முதல்முறையாக டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார் இந்தியாவின் விராட் கோலி.

5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவினார்கள். 

5-வது டெஸ்டில் பிரபல இந்திய பேட்டர் விராட் கோலி 11, 20 எனக் குறைவான ரன்களே எடுத்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 9-ம் இடத்திலிருந்து 13-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார் கோலி. நவம்பர் 2016-க்குப் பிறகு முதல்முறையாக டாப் 10 பட்டியலில் கோலி இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாமல் இருப்பதைத் தற்போது தரவரிசைப் பட்டியலும் உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்து தொடருக்கு முன்பு 47-வது இடத்தில் இருந்த பேர்ஸ்டோ, 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 5-வது டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட்டும் 2-வது இடத்தில் லபுஷேனும் 3,4-ம் இடங்களில் ஸ்மித், பாபர் ஆஸமும் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.