அணி மாறினார் சஹா

பிரபல கிரிக்கெட் வீரர் சஹா, பெங்கால் அணியிலிருந்து திரிபுரா அணிக்கு மாறியுள்ளார்.
அணி மாறினார் சஹா

பிரபல கிரிக்கெட் வீரர் சஹா, பெங்கால் அணியிலிருந்து திரிபுரா அணிக்கு மாறியுள்ளார்.

இந்திய அணிக்காக 40 டெஸ்டுகள், 9 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் சஹா. டெஸ்ட் அணியில் ரிஷப் பந்துக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது 2-வது விக்கெட் கீப்பராக பரத் தேர்வாகி வருகிறார். இதனால் இந்திய டெஸ்ட் அணியில் சஹாவால் மீண்டும் விளையாட வாய்ப்பில்லை. கடைசியாகக் கடந்த வருடம் நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்டில் விளையாடினார். 

2021-22 ரஞ்சி போட்டியில் பெங்கால் அணிக்காக  சஹா விளையாடாததால் அவருக்கும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டது. ரஞ்சி போட்டியின் நாக் அவுட் ஆட்டங்களில் சஹா விளையாட வேண்டும் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் விருப்பம் தெரிவித்தது. நாக் அவுட் ஆட்டங்களுக்கான பெங்கால் அணியிலும் சஹா இடம்பெற்றார். ஆனால் தன்னைப் பற்றி பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் தாஸ் தவறாகப் பேசியதால் விளையாட மறுத்தார் சஹா. மேலும் தான் வேறொரு அணியில் விளையாட அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில் சஹாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது பெங்கால் கிரிக்கெட் சங்கம். இதையடுத்து திரிபுரா அணியில் இணைந்துள்ளார் சஹா. அந்த அணியின் வீரராக மட்டுமல்லாமல் ஆலோசகராகவும் செயல்படவுள்ளார். 2022-23 உள்ளூர் போட்டிகளில் திரிபுரா அணியின் கேப்டனாக சஹா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பெங்கால் அணியுடனான சஹாவின் 15 வருடப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணிக்காக விளையாடிய சஹா, 11 ஆட்டங்களில் 317 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 132.32.

கடந்த வருடம் விஜய் ஹசாரே போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு திரிபுரா அணி தகுதி பெற்றது. ரஞ்சி போட்டியில் மூன்று ஆட்டங்களில் ஒரு புள்ளி மட்டுமே பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com