வெள்ளைப் பந்து கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிராகத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. 
வெள்ளைப் பந்து கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிராகத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி

2015 முதல் இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

மான்செஸ்டரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக பும்ரா இடம்பெறவில்லை. சிராஜுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி, 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ஆரம்பத்தில் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதன்பிறகு ரிஷப் பந்தும் பாண்டியாவும் அபாரமாக விளையாடி இந்திய அணியை மீட்டுக்கொண்டு வந்தார்கள். பாண்டியா 55 பந்துகளில் 71 ரன்களும் ரிஷப் பந்த் 113 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 125 ரன்களும் எடுத்தார்கள். ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பந்தும் தொடர் நாயகன் விருதை பாண்டியாவும் பெற்றார்கள். 

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. 

2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களில் இயன் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் தான் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய வெள்ளைப் பந்துத் தொடர்களில் ஒரு தொடர் தவிர அனைத்திலும் வெற்றியடைந்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து வெள்ளைப் பந்துத் தொடர்கள் (2015 முதல்)

2017 ஒருநாள் தொடர் - இந்தியா வெற்றி 
2017 டி20 தொடர் - இந்தியா வெற்றி 
2018 ஒருநாள் தொடர் - இங்கிலாந்து வெற்றி
2018 டி20 தொடர் - இந்தியா வெற்றி 
2021 ஒருநாள் தொடர் - இந்தியா வெற்றி 
2021 டி20 தொடர் -இந்தியா வெற்றி 
2022 ஒருநாள் தொடர் - இந்தியா வெற்றி 
2022 டி20 தொடர் - இந்தியா வெற்றி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com