லார்ட்ஸில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த புஜாரா

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கவுன்டி ஆட்டத்தில் இந்தியாவின் புஜாரா இரட்டைச் சதம் அடித்துள்ளார்.
லார்ட்ஸில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த புஜாரா

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கவுன்டி ஆட்டத்தில் இந்தியாவின் புஜாரா இரட்டைச் சதம் அடித்துள்ளார்.

கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 பிரிவில் லார்ட்ஸில் சஸ்செக்ஸ் - மிடில்செக்ஸ் அணிகளுக்கிடையிலான நான்கு நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. சஸ்செக்ஸ் அணியின் கேப்டனான புஜாரா, இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் எடுத்தார். 403 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எதிரணியில் இந்தியாவின் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளார். சஸ்செக்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 523 ரன்கள் எடுத்தது. 

இந்தப் பருவத்தில் புஜாரா எடுத்துள்ள 3-வது இரட்டைச் சதம். லார்ட்ஸில் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த முதல் சஸ்செக்ஸ் வீரர் என்கிற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். 118 வருடங்கள் கழித்து ஒரே கவுன்டி பருவத்தில் 3 இரட்டைச் சதம் அடித்த முதல் சஸ்செக்ஸ் வீரரும் அவர் தான். 

2022 கவுன்டி பருவத்தில் புஜாரா எடுத்த ரன்கள்

6(15)
201*(387)
109(206)
12(22)
203(334)
16(10)
170*(197)
3(7)
46(76)
231 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com