சென்னை செஸ் ஒலிம்பியாட் பாடல் வெளியானது: ரசிகர்கள் வரவேற்பு

ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.
சென்னை செஸ் ஒலிம்பியாட் பாடல் வெளியானது: ரசிகர்கள் வரவேற்பு

சென்னை மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 முதல் ஆக.10 வரை நடைபெறுகிறது. இதில், 188 நாடுகளைச் சோ்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

வரும் 28-ம் தேதி மாலையில் சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடியால் தொடக்கி வைக்கப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்குர், எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இந்நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்புப் பாடலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெல்கம் டூ சென்னை என்கிற இந்தப் பாடல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். பாடலை ரஹ்மானும் விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளார்கள். ஒளிப்பதிவு - ரத்னவேலு. நடனம் - பிருந்தா. பாடலுக்கான காணொளியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான், ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா உள்பட பிரபல செஸ் வீரர்களுக்கும் பாடலில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

பாடலும் அதைப் படமாக்கிய விதமும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள். பாடலில் செஸ் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com