அரசியலில் நுழைகிறாரா கங்குலி? வைரலாகும் ட்வீட்

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் சமீபத்திய ட்விட்டர் பதிவு, அவர் அரசியலில் நுழைகிறாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் சமீபத்திய ட்விட்டர் பதிவு, அவர் அரசியலில் நுழைகிறாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி புதிதாக ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

"1992-இல் கிரிக்கெட்டுடன் தொடங்கிய எனது பயணம், 2022-இல் 30 ஆண்டுகளை எட்டியுள்ளது. அப்போது முதல் கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. மிக முக்கியமாக உங்கள் அனைவரது ஆதரவும் எனக்குக் கிடைத்துள்ளது. இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த, ஆதரவு தெரிவித்த, இந்த உயரத்தைத் தொடுவதற்கு உதவிய அனைவருக்கும் எனது நன்றி.

இன்றைக்கு புதிதாக ஒன்றைத் தொடங்க நான் திட்டமிட்டுள்ளேன். அது நிறைய பேருக்கு உதவும் என நினைக்கிறேன். எனது வாழ்வின் இந்த அத்தியாயத்திற்கும் உங்களது ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்."

இந்தப் பதிவின் மூலம், ஏராளமான சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அவர் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகுகிறாரா என்ற சந்தேகம் ஒருபுறம் எழ, அரசியலில் நுழைவது குறித்து அறிவிக்கவுள்ளாரா என மறுபுறம் சந்தேகிக்கின்றனர் ரசிகர்கள்.

எனினும், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் கங்குலி தரப்பிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com