வேகமான பந்து வீசுவது என் நோக்கமல்ல: உம்ரான் மாலிக்

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வேகமான பந்து வீசுவது என்னுடைய நோக்கமல்ல என கூறியுள்ளார்.
படம்: டிவிட்டர், ஜேகேஎன்சி| உம்ரான் மாலிக்
படம்: டிவிட்டர், ஜேகேஎன்சி| உம்ரான் மாலிக்

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வேகமான பந்து வீசுவது என்னுடைய நோக்கமல்ல என கூறியுள்ளார். 

உம்ரான் மாலிக் ஐபிஎல் போட்டியில் 157 கி.மீ/மணி வேகத்தில் பந்து வீசி அசத்தினார். 2003 உலக கோப்பை போட்டியில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் 160.93கி.மீ/மணி பந்து வீசி சாதனைப் படைத்துள்ளார். 

ஜம்மு கஷ்மீரை சார்ந்த உம்ரான் மாலிக் ஐபிஎல்இல் ஹதராபாத் அணிக்காக தொடர்ந்து 150கி.மீ/மணி வேகத்தில் பந்து வீசி அசத்தினார். 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் எடுத்தார். அவர் தற்போது தென்னாப்ரிக்கா தொடரில் இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“வேகமாக பந்து வீசுவது என் நோக்கமல்ல. சரியான லைன்& லெந்தில் பந்து வீசி தென்னாபிரிக்காவுக்கு எதிராக எனது நாட்டை 5 போட்டிகளிலும் வெற்றிப்பெற செய்வதே நோக்கமாகும். 150 அல்லது அதற்கு மேலாக பந்து வீசுவதற்கு எனது உடலை பேணி வருகிறேன். 

அப்துல் சமத் என்னை உற்சாகப்படுத்துவார். எப்போதெல்லாம் அவருக்கு பந்து வீசுவனோ அப்போதெல்லாம் அவர் எனது பந்து மெதுவாக வருவதாக சொல்லுவார். அதனால் நான் இன்னும் அதிக வேகத்தில் வீசுவேன். மேலும்  சரியான உடற்பயிற்சியும் எனக்கு இதில் உதவியாக இருக்கிறது” என உம்ரான் மாலிக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com