இந்திய அணிக்குத் தேர்வான தமிழக இயன்முறை மருத்துவர்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய இயன்முறை மருத்துவராக தமிழகத்தைச் சேர்ந்த கம்லேஷ் ஜெயின் தேர்வாகியுள்ளார்.
இந்திய அணிக்குத் தேர்வான தமிழக இயன்முறை மருத்துவர்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய இயன்முறை மருத்துவராக தமிழகத்தைச் சேர்ந்த கம்லேஷ் ஜெயின் தேர்வாகியுள்ளார்.

இந்தியாவில் ஜூன் 9 முதல் நடைபெறும் டி20 தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. முதல் டி20 ஆட்டம் தில்லியில் நடைபெறுவதால் இரு அணி வீரர்களும் அங்குப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்திய அணியின் இயன்முறை மருத்துவராகப் பணியாற்றிய (பிசியோதெரபிஸ்ட்) நிதின் படேல், நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னையைச் சேர்ந்த கம்லேஷ் ஜெயின், இந்திய அணியின் புதிய இயன்முறை மருத்துவராகத் தேர்வாகியுள்ளார். 

2012 முதல் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இயன்முறை மருத்துவராக 10 வருடங்கள் பணியாற்றியுள்ளார் கம்லேஷ் ஜெயின். முதலில் உதவியாளராகப் பணியாற்றியவர், கடந்த மூன்று வருடங்களாக தலைமை இயன்முறை மருத்துவராகப் பணியாற்றினார்.

புதிதாகத் தேர்வாகியுள்ள கம்லேஷ் ஜெயின், தில்லியில் பயிற்சி பெறும் இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com