ஓய்வு பெற்ற மிதாலி ராஜ்: நிகழ்த்திய சாதனைகள்

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ்...
ஓய்வு பெற்ற மிதாலி ராஜ்: நிகழ்த்திய சாதனைகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் இன்று அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார். 

டெஸ்டில் 1 சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் எடுத்துள்ளார். அதேபோல டெஸ்டில் 4 அரை சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 64 அரை சதங்களும் டி20யில் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது.  1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். ஜெட் வேகத்தில் 22 வருடங்கள் ஓடிவிட்டன. 

சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜின் சாதனைகள்

* மகளிர் கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீராங்கனை, 10,868 ரன்கள். 

* ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை,  7805 ரன்கள். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸில் (211) விளையாடியவர். 

* டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை, 2364 ரன்கள்.

* மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50+ ரன்களை 50 முறை எடுத்த முதல் கேப்டன். 

* ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீராங்கனை. 1999-ல் அயர்லாந்துக்கு எதிராக 114* ரன்கள் எடுத்தார். 16 வருடங்கள், 205 நாள்கள். 

* ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இருமுறை (2005, 2017) இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய ஒரே கேப்டன். 

* 2006-ல் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் டி20 ஆட்டத்தின் கேப்டனாகச் செயல்பட்டவர் மிதாலி ராஜ். மூன்று டி20 உலகக் கோப்பை உள்பட 32 டி20 ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார்.  2019 செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்தார். 32 டி20 ஆட்டங்களிலும் மூன்று டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிவர்கள்:

22 வருடங்கள் 274 நாள்கள் - மிதாலி ராஜ்
22 வருடங்கள் 91 நாள்கள் - சச்சின் டெண்டுல்கர்
21 வருடங்கள் 184 நாள்கள் - ஜெயசூர்யா

(சச்சின், மிதாலி ஆகிய இருவரும் ஒரே வயதில், 16 வருடங்கள், 205 நாள்கள், இந்திய அணிக்கு அறிமுகமானார்கள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com