வேகப்பந்து வீச்சுக்கு எதிராகத் தடுமாறும் ஷ்ரேயஸ் ஐயர்!

வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஷ்ரேயர் ஐயர் தடுமாறி வருவதால் அவர் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.
வேகப்பந்து வீச்சுக்கு எதிராகத் தடுமாறும் ஷ்ரேயஸ் ஐயர்!

வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஷ்ரேயர் ஐயர் தடுமாறி வருவதால் அவர் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. இந்த ஆட்டத்தில் 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து பிரேடோரிய்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார் ஸ்ரேயஸ் ஐயர். ஸ்டிரைக் ரேட் - 133.33. அன்றைய ஆட்டத்தில் 10 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்ட இந்திய வீரர்களில் குறைந்த ஸ்டிரைக் ரேட்டை வைத்திருந்த பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர் தான். 

காரணம், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக ரன்கள் எடுக்க ஷ்ரேயஸ் ஐயர் தடுமாறியதுதான். 

சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி பந்தில் 3 சிக்ஸர்கள் அடித்தார் ஷ்ரேயஸ் ஐயர். தில்லி டி20யில் சுழற்பந்து வீச்சில் 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். ஆனால் வேகப்பந்து வீச்சில் 17 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷார்ட் பந்தில் ஐயர் தடுமாறி வருவதால் அதற்கேற்றபடி வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசி அவரைத் தடுமாறச் செய்து வருகிறார்கள். 

வேகப்பந்து வீச்சில் சிக்ஸரோ பவுண்டரிகளோ அவர் அடிப்பதில்லை. வேகப்பந்து வீச்சில் அதிக ரன்கள் எடுத்து ஆளுமை செலுத்த வேண்டும் என்றால் இன்னும் பல ஷாட்களை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும் என்று கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com