நார்வே செஸ் ஓபன்: பிரக்ஞானந்தா சாம்பியன்

நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில் போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா.
நார்வே செஸ் ஓபன்: பிரக்ஞானந்தா சாம்பியன்

நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில் போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா.

மேக்னஸ் கார்ல்சன், ஆனந்த் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்ற கிளாசிகல் வகை நார்வே செஸ் ஓபன் போட்டியுடன் குரூப் ஏ பிரிவில் இதர வீரர்கள் பங்கேற்கும் போட்டியும் நடைபெற்றது. 

பிரதான போட்டியை உலக சாம்பியன் கார்ல்சன் வென்றுள்ளார். தொடர்ச்சியாக நான்காவது முறை இப்போட்டியை அவர் வென்றதோடு கடந்த 10 வருடங்களில் ஐந்து முறை நார்வே செஸ் ஓபன் போட்டியை வென்றுள்ளார். சாம்பியன் ஆன கார்ல்சன் 16.5 புள்ளிகளைப் பெற்றார். 14.56 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்த் 3-ம் இடம் பெற்றார்.

குரூப் ஏ பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்த் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார். 7.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்று சாம்பியன் ஆகியுள்ளார். கடைசிச் சுற்றில் இந்திய வீரர் பிரனீத்தைத் தோற்கடித்தார். 

சமீபத்தில் நடைபெற்ற செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் நூலிழையில் சீன வீரரிடம் தோற்று பிரக்ஞானந்தா 2-ம் இடம் பெற்றார். அந்தப் போட்டியில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதுவரை இருமுறை பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோற்றுள்ளார். இதையடுத்து நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில் போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பிரக்ஞானந்தா. அடுத்ததாக மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவர் பங்கேற்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com