'தொடக்கத்தில் கவனமாக விளையாட வேண்டும்' : பாபர் அசாம்

தனது அணியினர் தொடக்கத்தில் கவனமாக விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்ற பாகிஸ்தான் அணி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்ற பாகிஸ்தான் அணி

தனது அணியினர் தொடக்கத்தில் கவனமாக விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கருத்துத் தெரிவித்துள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.  

மூன்றாவது ஒருநாள் போட்டி மணற்புயல் காரணமாக போட்டியின் ஓவர் குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 48 ஓவர்களில் 269 ரன்களை எடுத்தது. சேஸிங் செய்து ஆடிய மேற்கிந்திய அணி 37.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு மொத்த விக்கெட்டும் கொடுத்து ஆட்டமிழந்தது. 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் வெற்றி குறித்து பாபர் அசாம் கூறியதாவது: 

அணியாக நாங்கள் என்ன திட்டமிட்டோமோ அதையே நிறைவேற்றுகிறோம். எங்களது 100 சதவிகிதம் உழைப்பை மூன்று போட்டிகளிலும் அளித்தோம். நவாஸின் பவுலிங் இரண்டாவது போட்டியில் சிறப்பாக இருந்தது. அவருடைய சிறந்த போட்டிகளில் ஒன்றாக அந்த போட்டி நிச்சயமாக இருக்கும். அணியில் உள்ள எல்லோருக்கும் வாய்ப்பளித்து பரிசோதித்து பார்க்கிறோம். 

எப்போதுமே முன்னேற்றத்திற்கு இடமளிக்கிறோம். தொடக்கத்தில் பந்து புதியதாக இருக்கும்போது அணியினர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். ஃபீல்டிங்கிலும் முன்னேற்றம் தேவை. பிழைகளிலிருந்து கற்றுக் கொள்வேம் என நம்புகிறேன். நான் எப்போதுமே பாசிடிவ் கிரிக்கெட் ஆட விரும்புகிறேன். 3 விதமான காலநிலைகளில் 3 போட்டிகளை விளையாடினோம். பார்னர்ஷிப்தான் முக்கியமானது. உறுதுணையாக இருந்த முல்தான் மக்களுக்கு நன்றி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com