5-ம் நாளில் என்ன நடக்கும்?: பரபரப்பான கட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் (விடியோ)

நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.
கான்வே
கான்வே


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 145.3 ஓவர்களில் 553 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 190, டாம் பிளண்டல் 106 ரன்கள் எடுத்தார்கள். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 3-ம் நாள் முடிவில், 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்தது. ரூட் 163, ஃபோக்ஸ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். போப் 145 ரன்கள் எடுத்தார். 

இரட்டைச் சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், 4-ம் நாளில் போல்ட் பந்தில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 128.2 ஓவர்களில் 539 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 14 ரன்கள் முன்னிலை பெற்றது. நியூசி. அணியின் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்பிறகு 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 4-ம் நாள் முடிவில்  69 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 32, மேட் ஹென்றி 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். வில் யங் 56, கான்வே 52 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 238 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் கடைசி நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com