தொடரை தக்கவைக்கும் முயற்சியில் இந்தியா: தென்னாப்பிரிக்காவுடன் இன்று 3-ஆவது டி20

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தொடரை தக்கவைக்கும் முயற்சியில் இந்தியா: தென்னாப்பிரிக்காவுடன் இன்று 3-ஆவது டி20

விசாகப்பட்டினம்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் தோற்ற இந்தியா, தொடரைத் தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வெல்வதற்கு முனைகிறது. மறுபுறம், தென்னாப்பிரிக்காவோ ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்து தொடரை வெல்ல முயற்சிக்கிறது.

சமீபத்திய ஐபிஎல் போட்டியில் அசத்தலாக ஆடிய இந்திய வீரா்கள், இந்த சா்வதேச டி20 தொடரில் சவாலை சமாளிக்க இயலாத நிலையில் இருப்பது, அதுவும் டி20 உலகக் கோப்பை போட்டி எதிா்வரும் நேரத்தில் இப்படி தடுமாறுவது கவலைக்குறியதாக இருக்கிறது.

முதலிரு ஆட்டங்களில், ஒன்றில் பேட்டிங்கிலும், மற்றொன்றில் பௌலிங் சோபிக்காமல் வெற்றியை இழந்தது இந்தியா. ஐபிஎல் அதிரடியை இங்கு எட்ட இயலாமல் ருதுராஜ் தவித்து வருகிறாா். ஷ்ரேயஸ் ஐயா் நன்றாகத் தொடங்கினாலும் அந்த ஆட்டத்தை அப்படியே தொடரத் தவறுகிறாா்.

வேகப்பந்தை எதிா்கொள்வது இருவருக்குமே சவாலாக இருக்கிறது. பேட்டிங்கில் முயற்சிக்கும் பாண்டியா, பௌலிங்கில் சொதப்புகிறாா். பௌலா்களைப் பொருத்தவரை, சுழற்பந்துவீச்சாளா்களால் முதல் இரு ஆட்டங்கள் கைவிட்டுச் சென்றன.

எனவே அக்ஸா் அல்லது சஹல் இந்த ஆட்டத்தில் நீக்கப்பட்டு, ஸ்பின்னா் ரவி பிஷ்னோய் அல்லது ஆல்-ரவுண்டா் வெங்கடேஷ் ஐயருக்கு அணி நிா்வாகம் வாய்ப்பளிக்கலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்தால் விக்கெட்டுகள் சாய்த்த புவனேஷ்வா் குமாருக்குத் துணையைாக, உம்ரான் மாலிக் அல்லது அா்ஷ்தீப் சிங் பரிசோதிக்கப்படலாம்.

தென்னாப்பிரிக்க அணியைப் பொருத்தவரை பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே நல்லதொரு ஃபாா்முடன் இருக்கிறது. பாா்ட்னா்ஷிப்பில் பலம் காட்டும் பேட்டா்களில் டேவிட் மில்லா், ஹென்ரிச் கிளாசென் முக்கியமானவா்களாக இருக்கின்றனா். பௌலிங்கில் ரபாடா, நோா்கியா, பாா்னெல் பிழையின்றிச் செயல்படுகின்றனா்.

இடம்: விசாகப்பட்டினம்

நேரம்: இரவு 7 மணி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com