ஒருநாள் உலகக் கோப்பை: 2-வது பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி

உலகக் கோப்பைப் போட்டிக்கான 2-வது பயிற்சி ஆட்டத்திலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
மந்தனா (கோப்புப் படம்)
மந்தனா (கோப்புப் படம்)

உலகக் கோப்பைப் போட்டிக்கான 2-வது பயிற்சி ஆட்டத்திலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்தில் மார்ச் 4 முதல்  மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இன்று விளையாடியது. முதல் ஆட்டத்தில், பவுன்சர் பந்து தலைக்கவசத்தைத் தாக்கியதால் பேட்டிங்கைத் தொடர முடியாமல் வெளியேறினார் மந்தானா. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவர் இடம்பிடித்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மந்தனா 66 ரன்களும் தீப்தி சர்மா 51 ரன்களும் யாஷ்திகா பாட்டியா 42 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா வீராங்கனை பூஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதால் இந்திய அணி மீது புதிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எப்படியும் அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என இந்திய ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 

மார்ச் 6 அன்று தனது முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com