ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகருக்கு கரோனா

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகர் ஃபவாத் அகமது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

News image

பெனாட் - காதிர் கோப்பையுடன் இரு அணி கேப்டன்கள்

Updated On :3 மார்ச் 2022, 6:24 am

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகர் ஃபவாத் அகமது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளும் இதுவரை 25 டெஸ்டுகளில் மோதியுள்ளன. ஆஸ்திரேலியா 13 டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் 7 டெஸ்டுகளிலும் வென்றுள்ளன. 1998-ல் பாகிஸ்தானுக்கு வந்த மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸி. அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடருக்கு பெனாட் - காதிர் கோப்பை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகர் ஃபவாத் அகமதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 5 நாள்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானில் பிறந்த 40 வயது ஃபவாத் அகமது, ஆஸ்திரேலிய அணிக்காக 2013-ல் 3 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த பி.எஸ்.எல். போட்டியில் லாகூர் அணிக்காக விளையாடினார். போட்டி முடிவடைந்த பிறகு திங்கள் அன்று ஆஸ்திரேலிய அணியினர் தங்கும் நட்சத்திர விடுதிக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கரோனா உறுதியானது. பரிசோதனையின் முடிவு வரும்வரை அவர் எந்தவொரு ஆஸ்திரேலிய வீரருடனும் உரையாடவில்லை எனத் தெரிகிறது. கரோனா அறிகுறிகள் லேசாக உள்ள நிலையில் கரோனா இல்லை என இரு பரிசோதனைகளில் உறுதியானால் மட்டும் அணியினருடன் ஃபவாத் அகமது இணைவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.