இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தேசிய செஸ்: அர்ஜூன் சாம்பியன்

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 58-ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் தெலங்கானாவின் அர்ஜூன் எரிகாய்சி வியாழக்கிழமை வாகை சூடினார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:34 am

DIN

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 58-ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் தெலங்கானாவின் அர்ஜூன் எரிகாய்சி வியாழக்கிழமை வாகை சூடினார். 
11 சுற்றுகளின் முடிவில் அர்ஜூன், தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ், பி.இனியன் ஆகிய மூவருமே 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட "டை-பிரேக்கர்'-இல் வெற்றி பெற்று அர்ஜூன் சாம்பியன் ஆனார். அவருக்கு ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 
குகேஷ் 2-ஆம் இடமும், இனியன் 3-ஆம் இடம் பிடிக்க, நடப்புச் சாம்பியனாக இருந்த மற்றொரு தமிழரான அரவிந்த் சிதம்பரம் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தார். 
திவ்யா முதலிடம்: முன்னதாக, இப்போட்டியன் மகளிர் பிரிவில் மகாராஷ்டிரத்தின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் ஆக, சாக்ஷி சித்லாங்கே 2-ஆம் இடமும், ஆந்திரத்தின் பிரியங்கா நுடாகி 3-ஆம் இடமும் பிடித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.