அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: டேல் ஸ்டெய்னைத் தாண்டிய அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் டேல் ஸ்டெய்னைத் தாண்டிச் சென்றார் ஆர். அஸ்வின்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:41 am

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் டேல் ஸ்டெய்னைத் தாண்டிச் சென்றார் ஆர். அஸ்வின்.

இலங்கைக்கு எதிரான மொஹலி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் எடுத்ததோடு பேட்டிங்கில் அரை சதமும் எடுத்து அசத்தினார் அஸ்வின். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவ் எடுத்திருந்த 434 விக்கெட்டுகளைத் தாண்டி சென்று, 436 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களில் 2-ம் இடத்துக்கு முன்னேறினார்.

இந்நிலையில் பெங்களூர் டெஸ்டில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இன்று குசால் மெண்டிஸை 54 ரன்களிலும் தனஞ்ஜெயா டி சில்வாவை 4 ரன்களிலும் வீழ்த்தினார். இதையடுத்து 93 டெஸ்டுகளில் 439 விக்கெட்டுகளை வீழ்த்திய டேல் ஸ்டெய்னைத் தாண்டிச் சென்றார்.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 86 ஆட்டங்களில் 440 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். இதன்மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 8-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு முன்னால் வால்ஷ் 519 விக்கெட்டுகளுடன் 7-ம் இடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.