மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதி வாய்ப்பு இந்தியாவுக்கு எப்படி கிடைக்கும்?

மே.இ. தீவுகள் அணியின் இந்தத் தோல்வியால் கடைசி இரு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலே...
இந்திய அணி
இந்திய அணி

மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை பாகிஸ்தான் தோற்கடித்ததால் இந்திய அணி, அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி கடைசிக்கட்டத்தை அடைந்துள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெற தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் போட்டியிடுகின்றன. ஆஸ்திரேலியா ஏற்கெனவே 10 புள்ளிகளுடன் தகுதி பெற்றுவிட்டது. 

ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டம் மழை காரணமாக 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மே.இ. தீவுகள் அணி மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. டாட்டின் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் நிடா டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எளிதான இலக்கை நன்கு விரட்டிய பாகிஸ்தான் அணி, 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை முனீபா அலி அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.

மே.இ. தீவுகள் அணியின் இந்தத் தோல்வியால் கடைசி இரு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலே அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

இங்கிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தான், வங்கதேச அணிகளுடன் மோதுகிறது. இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் 8 புள்ளிகள் பெற்றிருக்கும். இதனால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். 

நியூசிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும். அதனால் நியூசிலாந்து தகுதி பெறுவது மிகக் கடினம். 

வங்கதேசம், தென்னாப்பிரிக்க அணிகளுடன் அடுத்ததாக மோதுகிறது இந்திய அணி. இதில் வங்கதேசத்துடன் மட்டும் வெற்றி பெற்றாலே 6 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். நியூசிலாந்தின் ரன்ரேட் -0.229 என இருப்பதால் அது பின்னடவைச் சந்தித்துள்ளது. இந்திய அணியின் தற்போதைய ரன்ரேட் 0.456. இதனால் நியூசிலாந்து இன்னொரு வெற்றி பெற்றாலும் ரன்ரேட்டால் அதற்குப் பாதிப்பு ஏற்படும். 

மே.இ. தீவுகள் அணியின் ரன்ரேட்டும் -0.885 என உள்ளது. அடுத்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் 8 புள்ளிகளுடன் தகுதி பெறும். தோற்றால் இந்த ரன்ரேட்டுக்குக் கடினம் தான். 

தென்னாப்பிரிக்கா அடுத்ததாக ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக மோதுகிறது. இதில் ஒரு வெற்றி பெற்றால் போதும், 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com