பாதை கடினமாகத்தான் இருக்கும்: மகனுக்கு சச்சின் கூறிய அறிவுரை

கிரிக்கெட் பாதை கடினமாகத்தான் இருக்கப்போகிறது என அர்ஜூன் டெண்டுல்கருக்கு அவரது தந்தையும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கிரிக்கெட் பாதை கடினமாகத்தான் இருக்கப்போகிறது என அர்ஜூன் டெண்டுல்கருக்கு அவரது தந்தையும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு வீரராக இருந்து வருகிறார். அவர் இரண்டு சீசன்களாக மும்பை அணியில் இருந்தாலும் அவருக்கு போட்டியில் ஆடும் லெவனில் ஒரு முறை கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கப் போகிறது என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சச்சின்சைட் (sachinsight) என்ற நிகழ்ச்சியில் பேசிய சச்சின் டெண்டுல்கர் இதனை தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடாதது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

"இது ஒரு வித்தியாசமான கேள்வி. இந்த சீசனில் மும்பை அணி தனது அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி முடித்து விட்டது.

அர்ஜூன் டெண்டுல்கரிடம் என்னுடைய உரையாடல் இப்படித்தான் இருக்கும். 'உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைப் பாதை சவாலாகத்தான் இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் நீ கிரிக்கெட் விளையாடத் தொடங்கினாய். அந்த ஆர்வம் இருந்தால் தொடர்ந்து உனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை நீ கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி செய்யும்போது உனக்கான நல்ல பலன் கிடைக்கும்.'

அர்ஜூன் டெண்டுல்கர் அணியில் இடம் பெறுவது அணித் தேர்வுக் குழு எடுக்கும் முடிவு. அணி தேர்வு செய்யும் குழுவில் ஒருபோதும் என்னுடைய தலையீடு இருக்காது. அந்த வேலை அணி நிர்வாகத்தினுடையது" என சச்சின் உறுதிபட தெரிவித்தார்.

22 வயதான அர்ஜூன் டெண்டுல்கர் இதுவரை  2 உள்ளூர் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com