இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான ஆா்.பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.
நடப்பு சீசனில், உலகின் நம்பா் 1 வீரரான காா்ல்செனை இரண்டாவது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா, நேற்று அரையிறுதிப் போட்டியில் டச்சு நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் குமார் கிரியை எதிர்கொண்டார்.
இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி வரை தொடர்ந்த போட்டியில் பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி அனிஷ் குமாரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பிரக்ஞானந்தா தற்போது 11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுக்காக படித்துக் கொண்டே, இந்தப் போட்டியிலும் பங்கேற்றுள்ள நிலையில் இன்று காலை நடைபெறவுள்ள தேர்விலும் பங்கேற்கவுள்ளார்.