செஸ் இறுதிச்சுற்று: முதல் நாளில் பிரக்ஞானந்தா தோல்வி

இரு நாள்களாக நடைபெறும் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில்...
செஸ் இறுதிச்சுற்று: முதல் நாளில் பிரக்ஞானந்தா தோல்வி

இரு நாள்களாக நடைபெறும் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் முதல் நாளில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளார்.

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் அரையிறுதியில் நெதர்லாந்தைச் சேர்ந்த அனிஷ் கிரியைத் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. நேற்று காலை 11-ம் வகுப்புத் தேர்வை முடித்துக்கொண்டு இரவில் இறுதிச்சுற்றில் அவர் கலந்துகொண்டார்.

சீனாவைச் சேர்ந்த உலகின் நெ.2 வீரர் டிங் லிரினுடன் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா மோதி வருகிறார். முதல் நாளில் 2.51.5 என சீன வீரர் வென்று முன்னிலையில் உள்ளார். 

29 வயது டிங் லிரின் முதல் ஆட்டத்தில் வென்றார். உடனே 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்று சமன் செய்தார். ஆனால் 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்று 2-1 என முன்னிலை வகித்தார் டிங் லிரின். பிரக்ஞானந்தா கட்டாயமாக ஜெயிக்கவேண்டிய கடைசி ஆட்டம் டிரா ஆனது. இதனால் முதல் நாளில் 2.51.5 என சீன வீரர் முன்னிலை பெற்றுள்ளார். 

2-ம் நாளான இன்று நடைபெறும் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால் டை பிரேக்கர் மூலமாக வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இன்று தேர்வு எதுவும் இல்லாததால் நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு புது உற்சாகத்துடன் பிரக்ஞானந்தா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2-ம் நாள் ஆட்டம் இன்றிரவு இந்திய நேரம் 9.30 மணிக்குத் தொடங்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com