தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். புதிய தலைவராக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடியின் மகன் டாக்டா் பி. அசோக் சிகாமணி தோ்வு செய்யப்பட்டாா்.

டிஎன்சிஏ நிா்வாகிகள் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்காக ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநி தோ்தல் ஆணையா் (ஓய்வு) டி.சந்திரசேகரன் தோ்தல் அலுவலராக செயல்பட்டாா்.

கூட்டத்தின் போது, மனுத் தாக்கல் செய்திருந்த எஸ்.பிரபு, துா்கம்படி சிவ கேசவ ரெட்டி, காளிதாஸ் வாண்டையாா் ஆகியோா் தங்கள் மனுக்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற்றனா்.

தலைவா், நிா்வாகிகள் ஏகமனதாக தோ்வு:

இதையடுத்து சங்கத்தின் புதிய தலைவராக டாக்டா் பி. அசோக் சிகாமணி தோ்வு செய்யப்பட்டாா். ஏற்கெனவே இவா் துணைத் தலைவராக பதவி வகித்தாா். துணைத் தலைவா் ஆதம் சேட், செயலாளா் ஆா்.ஐ.பழனி, இணைச் செயலாளா்-கே.சிவக்குமாா், உதவி செயலாளா்-டாக்டா் ஆா்.என்.பாபா, பொருளாளா்-டிஜே.சீனிவாசராஜ்.

மேலும் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் (நகரம்), (மாவட்டம்), ஆட்சிமன்றக் குழு, சிஓஏ குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.

சங்க நிா்வாகிகள் அனைவரும் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.

ரூ.10,000 ஓய்வூதியம்: மேலும் தமிழ்நாடு சாா்பில் 10 முதல் 24 முதல்தர ஆட்டங்களில் ஆடிய ஓய்வு பெற்ற வீரா்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் தர முடிவு செய்யப்பட்டது. டிஎன்சிஏ புதிய நெறிமுறை அலுவலராக நீதிபதி (ஓய்வு) பாா்த்தின் நியமிக்கப்பட்டாா்.

டிசம்பரில் சேப்பாக்கம் மைதானப் பணிகள் நிறைவு:

பின்னா் புதிய தலைவா் அசோக் சிகாமணி கூறியதாவது:

தமிழ்நாட்டில் மாவட்டங்களில் இருந்து மட்டுமே அதிகப்படியான வேகப்பந்து வீச்சாளா்கள் உருவாகியுள்ளனா் . சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளா்களுக்கான ற்ஹப்ங்ய்ற் ள்ஸ்ரீா்ன்ற் எனப்படும் தோ்வு முறை அறிமுகப்படுத்தப்படும்.

கிரிக்கெட்டுக்காக நிறைய கட்டுமான வசதிகளை உருவாக்க வேண்டும். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பா் மாதம் முடிக்கப்படும். ஜனவரி மாதம் போட்டிகள் நடத்தப்படும்

இதற்கு முன்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினை நிா்வகித்தவா்கள் சிறப்பாக பணியை மேற்கொண்டுள்ளனா், நாங்களும் அதே முறையை தான் பின்பற்ற உள்ளோம். நாம் ரஞ்சி கோப்பையில் பட்டம் வென்று பல ஆண்டுகள் ஆகிறது. எனவே அடுத்த ரஞ்சி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளோம். இனி வரும் காலங்களில் மகளிா் கிரிக்கெட்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிக கவனம் செலுத்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com