டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் பாகிஸ்தான்! 

சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்

சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.

சூப்பர் 12 சுற்றில் டாஸ் வென்ற வங்க தேசம் அணி பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது. நெதர்லாந்து அணியின் அதிர்ச்சி வெற்றியால் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்தது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். இதனால் இந்தப் போட்டி மிக முக்கியமானது. 

வங்கதேச அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷண்டோ 54 ரன்களும், சௌமியா சர்கார் 20 ரன்களும், ஹொசைன் 24 ரன்களும் எடுத்தனர். 

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியிஜ் தொடக்க வீரர்கள் பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் பொறுப்பான தொடக்கத்தை அளித்தனர். 10 ஓவர் வரை விக்கெட் விடாமல் ஆடினர். பாபர் ஆஸம் 32 ரன்களுக்கும், ரிஸ்வான் 25 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மொஹமது ஹாரிஸ் சிறப்பாக விளையாடி 18 பந்துகளுக்கு 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

18.1 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 128 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் பி-யில் இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. 

வங்கதேசத்தின் மோசமான ஃபீல்டிங்கினால் இந்த போட்டியில் தோல்வியை தழுவியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com