2024 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்ற அணிகள் எவை?

2024 டி20 உலகக் கோப்பைப் போட்டி மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.
2024 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்ற அணிகள் எவை?


2024 டி20 உலகக் கோப்பைப் போட்டி மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டியில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன (இந்தமுறை 12 அணிகள்).

இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 8 அணிகள் அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த உலகக் கோப்பை நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. அதன்படி குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே நெதர்லாந்து அணி நேரடியாக தகுதி பெற்றிருப்பது முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. 

போட்டியை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகளும் அமெரிக்காவும் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுகின்றன.

இந்த 10 அணிகளுடன் ஐசிசி தரவரிசையில் மேலே உள்ள வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன.

12 அணிகள் இதுபோல நேரடியாகத் தேர்வாகிவிட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. இந்தமுறை சூப்பர் 12 சுற்றில் விளையாடிய அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி அதன் வழியாகவே உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com