நியூசிலாந்து டி20 தொடர்: மாற்றம் ஏற்படுத்துமா பாண்டியா அணி?

பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் டி20 தொடரை வென்றால்...
நியூசிலாந்து டி20 தொடர்: மாற்றம் ஏற்படுத்துமா பாண்டியா அணி?

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

நவம்பர் 18 முதல் தொடங்கும் டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 ஆட்டங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணிக்குத் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்கி நவம்பர் 30 அன்று முடிவடைகிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. 

டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. பலரும் எதிர்பார்த்த பிருத்வி ஷாவுக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல டி20 உலகக் கோப்பையில் மாற்று வீரராக இடம்பெற்ற பிஸ்னோய் இத்தொடரில் சேர்க்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது இந்திய அணி. அதனால் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் டி20 தொடரை வென்றால் அது இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதும் வாய்ப்பைப் பெறலாம். இந்திய டி20 அணியில் இனிமேல் ரோஹித் சர்மா, ராகுல், தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெறக் கூடாது எனச் சமூகவலைத்தளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள். ஐபிஎல் போட்டியில் சாதித்த இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும், இங்கிலாந்து அணி போல இந்திய அணியின் அணுகுமுறையில் மாற்றம் தேவை எனப் பலரும் கருத்து கூறியுள்ள நிலையில் பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக நியூசிலாந்து டி20 தொடர் அமையலாம். 

நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி

பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், சஹால், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், சிராஜ், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com