ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்: பிரபல ஆஸி. வீரர் அறிவிப்பு

ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து விலகுவதாக பிரபல ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்: பிரபல ஆஸி. வீரர் அறிவிப்பு

ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து விலகுவதாக பிரபல ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக உள்ளார் பேட் கம்மின்ஸ். 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 7.25 கோடிக்கு கம்மின்ஸைத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. எனினும் 5 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய கம்மின்ஸ், இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகினார். 

இந்நிலையில் பணிச்சுமை காரணமாக ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கம்மின்ஸ். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: அடுத்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவது குறித்த கடினமான முடிவை எடுத்துள்ளேன். அடுத்த 12 மாதங்களுக்கு நிறைய டெஸ்ட், ஒருநாள் ஆட்டங்கள் உள்ளன. எனவே ஆஷஸ், உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வேன். புரிதலுக்காக கேகேஆர் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அருமையான வீரர்களும் பயிற்சியாளர்களும் உள்ளார்கள். விரைவில் கேகேஆர் அணியுடன் இணைவேன் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com