விஜய் ஹசாரே: சாய் சுதர்சன், ஜெகதீசன் சதங்களால் சத்தீஸ்கரை வீழ்த்திய தமிழக அணி!
விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டிக்கான 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி.
பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கரை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
தமிழக அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்சனும் ஜெகதீசனும் அபாரமான தொடக்கத்தை அளித்தார்கள். ஆந்திராவுக்கு எதிராகச் சதமடித்த ஜெகதீசன் இந்த ஆட்டத்திலும் சதமடித்து அசத்தினார். ஆந்திராவுக்கு எதிராக 73 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் இந்தமுறை சதமடித்து தனது திறமையை மேலும் வெளிப்படுத்தினார். சாய் சுதர்சன் 121 ரன்களுக்கும் ஜெகதீசன் 107 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். தமிழக அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்தது.
கடினமாக இலக்கை அடைய நன்கு விளையாடியது சத்தீஸ்கர் அணி. கேப்டன் ஹர்ப்ரீத் சிங் 121 ரன்களும் அமன்தீப் கரே 115 ரன்களும் எடுத்தார்கள். எனினும் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சோனு யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Article
மும்பையை விட்டுப் பிரிந்த பொலார்ட்: சாதனைகளும் முக்கிய அம்சங்களும்!
ஐபிஎல் போட்டியிலிருந்து பொலார்ட் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி!
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள்!
சானியா மிர்சாவுக்காகப் பதிவு எழுதிய சோயிப் மாலிக்!
ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்: பிரபல ஆஸி. வீரர் அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு: இரு பிரபல வீரர்கள் நீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

